நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இன்று (04) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களினால் 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.


Post a Comment
Post a Comment