முதலாவது மாணவர் விடுதி - வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்



 


55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


இதன்படி, குறித்த திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.