தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கை கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் நிறைவேற்று குழுக் கூட்டத்தில், சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நியமனம், சர்வதேச கால்பந்து அரங்கில் இலங்கையின் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்வர் உமரின் தலைமையின் கீழ், இலங்கையின் FIFA உலகத் தரவரிசை 207ஆவது இடத்திலிருந்து 187ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், அவர் ஏற்கனவே FIFA அடிமட்ட கால்பந்துக் குழு மற்றும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் வளர்ச்சிக் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment