பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்ட கதிரைகள்



 



ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகள் அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் கலந்து கொண்டு கதிரைகளை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மற்றும் பிரஜா சக்தியின் தலைவர் சுதன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
ஒரு இலட்சம் நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்னும் பலபாடசாலைகளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.