22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணை நிறைவு



 


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. 


குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (02) தெரிவித்துள்ளது.