🇳🇱 #நெதர்லாந்து #தூதுவரின்_காத்தான்குடி,#விஜயம்

🇳🇱 #நெதர்லாந்து #தூதுவரின்_காத்தான்குடி #அல் #அக்ஸா #பள்ளிவாயல் #விஜயம்

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்திய சிறப்புமிக்க சந்திப்பு

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் His Excellency Mr. Wiebe Jakob de Boer அவர்கள், அவருடன் வருகை தந்த Mr. Namal Perera மற்றும் Mr. Chryshane Mendis ஆகியோருடன் எமது புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு 03.09.2026 வியாழக்கிழமை இன்று 11.30 மணியளவில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயம் மிகவும் சிறப்பான முறையிலும், அன்பான வரவேற்புடனும் நடைபெற்றதுடன், தூதுவர் அவர்களுக்கு எமது பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பில் விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எமது பள்ளிவாயல் தலைவரும் நகர சபை உறுப்பினருமான  ஜனாப் MIM. ஜவாஹிர் JP, உப தலைவர் MIM. பைசர் நகர சபை உறுப்பினர் மௌலவி அஜ்வத் பலாஹி, எமது பள்ளிவாயல் ATMT (awirnes through mosque tour) குழுத் தலைவர் அல்ஹாஜ் சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB, பிரதம இமாம் அஷ் ஷெய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA மற்றும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், நிகழ்வில் அல்ஹாஜ் சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB அவர்கள், காத்தான்குடி பிரதேசத்தின் வரலாறு, சமூக, கல்வி, சமய மற்றும் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களையும், எமது அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலின் சமய, கல்வி, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்தார்.

அத்துடன், தூதுவர் அவர்களால் காத்தான்குடி மற்றும் எமது பள்ளிவாயல் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சட்டத்தரணி அவர்களினால் தெளிவானதும் திருப்திகரமானதுமான பதில்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தூதுவர் அவர்கள் எமது பள்ளிவாயலை முழுமையாகப் பார்வையிட்டு, அதன் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

இந்த விஜயத்தின் போது, மத நல்லிணக்கம், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பிலும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

விஜயத்தின் நிறைவில், எமது பள்ளிவாயலுக்கு வருகை தந்தமை குறித்து தனது மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்திய His Excellency Mr. Wiebe Jakob de Boer அவர்கள், எமது பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் சமூகத்தினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றார்.

இவ்விஜயம் எமது அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கும், காத்தான்குடி சமூகத்திற்கும் ஒரு முக்கியமான நினைவாக அமைந்ததுடன், இலங்கை – நெதர்லாந்து நட்புறவு, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான சந்திப்பாகவும் அமைந்தது.

அல்லாஹ் எமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் அமைதியையும், ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

ஊடகப் பிரிவு 

அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயல்

புதிய காத்தான்குடி #அல் #அக்ஸா #பள்ளிவாயல் #விஜயம்

புதிய காத்தான்குடி