பிரிட்டனில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், அவரது அணி 38-வது இடத்தைப் பிடித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு லீ மான்ஸ் கோப்பை பந்தயம் தொடங்கப்பட்டது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
ஒற்றை இருக்கை பந்தயமாக ஃபார்முலா ஒன் உள்ளது. ஆனால், லீ மான்ஸ் கோப்பை என்பது இரு வீரர்கள் ஒரு காரை பகிர்ந்துகொண்டு ஓட்டும் நீண்டநேர பந்தயமாக நடத்தப்படுகிறது.
சனிக்கிழமையன்று 5.891 கி.மீ அளவுள்ள கிராண்ட் பிரிக்ஸ் தடத்தில் இரண்டு மணிநேரப் பந்தயமாக இந்த போட்டி நடைபெற்றது. 2026-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நடிகர் அஜித்குமார் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லீ மான்ஸ் புரோட்டோடைப் காரை LMP3 Pro/Am பிரிவு பந்தயத்தில் ஓட்டினார்.
38வது இடம்பிடித்த அஜித் அணி
இந்த போட்டியில் 38வது இடத்தை அஜித்குமார் பங்கேற்ற அஜித் ரேடாண்ட் அணி பிடித்துள்ளது. முதலிடத்தை ஏஎன்எஸ் மோட்டார்ஸ்போர்ட் அணியும் இரண்டாம் இடத்தை ஆர்-ஏஸ் ஜிபி (R-ACE GP) அணியும் பிடித்துள்ளன.
தமிழ்நாடு அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் விஜய் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்கியூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள ரேஸ் கண்ட்ரோல் மற்றும் ரேஸ் சர்க்கியூட் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், முதலமைச்சர் விஜயுடன் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
விந்தணுதானம் மூலம் பிறந்த பெண்
விந்தணு தானத்தால் பிறந்த பெண் தனது தந்தையை தேடியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்
திருப்பதி பெருமாள்
திருப்பதியில் பெருமாளை தரிசிக்க உள்ள 11 வழிகள் பற்றி தெரியுமா?
அஜித் பங்கேற்கும் லு மான் போட்டியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் - அதன் சிறப்புகள் என்ன?
பாரிஸில் உள்ள செய்ன் (Seine) நதியில் நடைபெற்ற ஒரு சமய ஊர்வலத்துக்கு முன்னதாக, சுவாமிநாராயண் சன்ஸ்தா BAPS-ஐச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஈஃபிள் கோபுரத்துக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த துறவிகள் பெண்களை தொடவோ, பார்க்கவோ கூட செய்யாமல் இடைவெளி கடைபிடிப்பது ஏன்?
End of அதிகம் படிக்கப்பட்டது
இதனிடையே, விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இருவரும் ஆரத்தழுவும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் பட மூலாதாரம்,TNDIPRNEWS
'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்'
முன்னதாக, செப்டம்பர் 3ஆம் தேதியன்று 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். "தமிழ்நாட்டில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். சர்வதேச தரத்திலான ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், அதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்" என அறிவித்திருந்தார்.
இதை வரவேற்ற நடிகர் அஜித்குமார் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வரிகளை மேற்கோள்காட்டி, "தமிழ்நாடு அரசின் சிறிய முயற்சி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான மாபெரும் பாய்ச்சல்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலகளவில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய், கடந்த வியாழக்கிழமையன்று பிரிட்டனுக்கு சென்றார்.


Post a Comment
Post a Comment