(காரைதீவு நிருபர் சகா)
"ஆலய திருவிழாக்களில் களியாட்டம் வாண வேடிக்கைகள் அவசியமா? "என்ற தலைப்பிலான
ஆன்மீக விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று (4) வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
கண்முனை நெற் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடல், வலையமைப்பின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறியாழ்கையில் நடைபெற்றது.
கலந்துரையாடலில், பெரிய நீலாவணை மகாவிஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான தாமோதரம் பிரதீபன், காத்தவராயன் காந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கல்முனை நெற் ஸ்தாபகர் புவி. கேதீஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிப்பதிவை, நெற் குழுமத்தினரான ப. சந்திரமோகன் ,என் சௌவியதாசன், கா.சாந்தகுமார், கே.ரிஷி ஆகியோர் மேற்கொண்டனர்.
விரைவில் இவ் வீடியோ வெளியாகும்.


Post a Comment
Post a Comment