கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!



 


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார். இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.