திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - யாழில் போராட்டம்



 


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்றதைக் கண்டித்து, சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இன்று (27) மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.