இந்த ஆண்டில் இதுவரை 16 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை மொத்தம் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 74,637 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 408,024 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதனையடுத்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜேர்மனியிலிருந்து 94,007 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இம்மாதத்தின் முதல் 14 நாட்களில் இந்தியாவிலிருந்து மட்டும் 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
.webp)

Post a Comment
Post a Comment