திக்வெல்ல பேருவள மழைநீர் வழிந்தோடும் தொகுதி மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தல் கருத்திட்டம் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திக்வெல்ல நகருக்கு அண்மையில் அமைந்துள்ள பகுதி நகரப் பிரதேசமாகவுள்ள வெவுறுகன்னல பிரதேசம் தொடர்ச்சியாக வெள்ள நிலைமை ஏற்படுகின்றது.
பேருவள எனும் சதுப்புநிலத்தை நிரப்புதல் மற்றும் சன்டிஸ் கால்வாய் எனும் பெயரிலான பிரதான கால்வாயின் இருபுறமும் முறையற்ற நகரமயமாக்கலால் கால்வாய் குறுகியமையால் சரியான வகையில் நீர் வழிந்தோடாமையே இப்பிரச்சினைக்குப் முக்கிய காரணமாக அமைகின்றது.
இந்நிலைமையின் அடிப்படையில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தால் ஏற்புடைய பிரதேசத்தில் நீர் விஞ்ஞான கற்கை மேற்கொண்டு வடிகாலமைப்புத் தொகுதியை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நிறுவனத்திற்கு அத்திட்டங்களுக்குரிய தகுந்த விதந்துரைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, திக்வெல்ல பேருவள மழைநீர் வழிந்தோடும் வடிகாலமைப்புத் தொகுதி மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டத்தை 2,946 மில்லியன் ரூபாய்கள் செலவு மதிப்பீட்டின் கீழ் 2027 – 2030 காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கும், அதன்கீழ் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• பேருவள தாழ்நிலங்கள் 14 ஏக்கர்கள் அளவில் பிரதேசமொன்று நீர் தேங்கும் பிரதேமாக (குளமாக) மீள்கட்டமைத்தல்.
• இக்குளத்தில் 1.8 கிலோமீற்றர் அளவு நீளம் கொண்ட குளக்கட்டு பெரஹர மாவத்தை மற்றும் பொதுமக்களுக்கான நடைபாதையாக நிர்மாணித்தல்.
• இப்பிரதேசத்தில் சேர்கின்ற மழைநீர் சதுப்பு நிலத்திலிருந்து வாவி வரைக்கும் செல்கின்ற சன்டிஸ் கால்வாய் விரிவாக்கி பராமரிப்பு வீதியுடன் கூடிய களப்பு வரைக்கும் அபிவிருத்தி செய்தல்.
• உப கால்வாய் வீதியாக உத்தேச குளத்திலிருந்து பெலியத்த மாற்று வீதியின் ஊடாக வாவி வரைக்குமான புதிய கால்வாய் வீதியை அமைத்தல் மற்றும் ஏனைய இரண்டாம் நிலை கால்வாய் வீதியை அமைத்தல்.
• கால்வாய் ஊடாக காணப்படுகின்ற வீதிக்கான வடிகான் போக்கு மற்றும் குளத்தை அண்டிய வடிகான் போக்குகளை மேம்படுத்தல்.
• உத்தேச நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தின் தேவைகளுக்கமைவாக பொது வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
.webp)

Post a Comment
Post a Comment