ஈரானின் அறிவிப்பால் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!



 


அமெரிக்காவுடன் இதுவரை நேரடி பேச்சு வார்த்தையை மறுத்து வந்த ஈரான் தற்போது நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது. 


மேலும் போர்ப் பதற்றத்தை தணிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இரண்டே நாளில் ஒரு சதவீதம் வரை குறைந்துள்ளது.


மேலும் இந்த விலை குறைவு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, அமெரிக்காவின் மசகு எண்ணெய் இருப்பு கடந்த வாரம் 3 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்து 426.4 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டது. 


இதுவும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைய ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.