தெரிவு செய்யப்பட்ட பிரதான குளங்களுக்குச் சொந்தமான எல்லைகள் மற்றும் பாதுகாப்பு பிரதேசங்களைப் பாதுகாக்கும் கருத்திட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமகாலத்தில் காணிப் பயன்பாட்டுப் போக்குகளுக்கமைய பாதிப்புக்குள்ளாகியுள்ள நீர்மூலங்களைப் பாதுகாக்கும் ஒருபடிமுறையாக நீர்ப்பாசன திணைக்களத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்ற பிரதான குளங்களில் எல்லைகள் இத்திணைக்களத்தின் எல்லைக்கற்கள் இட்டு திட்டவட்டமாக நிலத்தை அடையாளப்படுத்துவதற்கு ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ கருத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் ஏற்புடைய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன திணைக்களத்தின் மூலம் கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக 2025.06.16 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, பல்வேறு பாதிப்புக்களுக்குள்ளாகி, தற்போது தெரிவு செய்யப்பட்ட 21 குளங்களின் பணிகள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ளதுடன், நுவர வாவி, கந்தளாய் குளம் மற்றும் திஸ்ஸ வாவி போன்ற 03 குளங்கள் உள்ளிட்ட எல்லைகளை குறியீடு செய்து, எல்லைக் கற்களை இடுகின்ற பணிகள் அவ்வாண்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற கருத்திட்ட யோசனையில் உள்வாங்கப்பட்ட 48 குளங்களின் பணிகள் ஆரம்பிக்கப்படாத எஞ்சிய பணிகளை அடுத்துவரும் ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எஞ்சிய குளங்களின் நில அளவைப் பணிகளை மேற்கொள்ளல், எல்லைக் கற்களை தயாரித்தல் மற்றும் பொருத்துதல் மற்றும் மரநடுகை உள்ளிட்ட 2025 – 2028 காலப்பகுதிக்கான ஒட்டுமொத்த கருத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவாக 400 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தை தொடர்ந்தும் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
.webp)

Post a Comment
Post a Comment