பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவொன்று, விரிவுரையாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பக் கோரி பேராதனை கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பெருமளவு விரிவுரையாளர் மற்றும் துறைத்தலைவர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
வெற்றிடங்கள் நிரப்பப்படாததால் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
.webp)

Post a Comment
Post a Comment