Hate Speech (வெறுப்புப் பேச்சு)  தொடர்பான பயிற்சிப்பட்டறை



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான Hate Speech (வெறுப்புப் பேச்சு) தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று (25.09.2026) நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், வைத்தியர்கள், கணக்காளர், மெட்ரோன், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வெறுப்புப் பேச்சு தொடர்பான அடிப்படை அறிவு, அதன் தாக்கங்கள் மற்றும் அதனைத் தடுப்பதற்கும், பணியிடச் சூழலில் பொறுப்புடன் கையாள்வதற்குமான நடைமுறை வழிமுறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வெறுப்புப் பேச்சை அடையாளம் காணுதல், அதனைத் தவிர்த்தல் மற்றும் தொழில்சார் பொறுப்புடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.