ஃபௌஸி பகிரங்க மன்னிப்பு





 தனிப்பட்ட தேவைக்காக அரச வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஃபௌஸி பகிரங்க மன்னிப்பு…!!!!


இலங்கையின் முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌஸி, அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியமை தொடர்பாக, ஒக்டோபர் 24ஆம் திகதி சிங்கள அரச செய்தித்தாளில் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவர் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு சுமார் ரூ. 66 இலட்சம் செலுத்துவதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களிலும் மன்னிப்பை வெளியிட வேண்டும்.


நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக வழங்கிய வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவ அடிப்படை உரிமையை அவர் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.