( எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு நேற்று (01) பாடசாலையினது கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் எம்.எஸ்.எச்.ஆர். மஜிதியா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம். நிஜாம், EPSI ஒருங்கிணைப்பாளர் ஐ. எல். ஏ ரஹ்மான் மற்றும் பாடசாலையினது அபிவிருத்தி நிறைவேற்று குழுவினது (SDEC) செயலாளர் எஸ். எச். எம். அஜ்வாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் ஏ. எல். எம். முர்ஷித் (முஃப்தி )கலந்து கொண்டார். கல்முனை கல்வி வலயத்தில் சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்த இப்பாடசாலை, இவ்வாண்டு 95 சதவீத சித்தியை பெற்றுள்ளதுடன், 148 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சாதனை மாணவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் அதிதிகளுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலையினது உதவி அதிபர் எம். ஏ. மிஷ்னா, SDEC உறுப்பினர்களான எம். ஜே. எம். சமீர், ஐ. எஸ். சித்தி ஷெரீன், எம். ஜெ. எம். ஜஸீல் பாடசாலையினது PPA செயலாளர் ஆதம்பாவா ஹஸீனா பானூ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment