சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் - ஹூதிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு




 யேமனைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹூதி அமைப்பு, கடந்த 48 மணித்தியாலங்களில் சவூதி அரேபியாவின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.


சவூதி தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், யன்பு பகுதியில் உள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் வசதிகள், அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாமில் உள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காகியதாக ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.


கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், தம்மாமில் உள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் தொடர்பான தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.