தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், யான் ஓயா நீர்த்தேக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தின் அறுவடை நேற்று (15) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் வருடாந்த மீன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், மொத்தம் 2,996 மீன்களிலிருந்து 1,202 கிலோகிராம் மீன் அறுவடை செய்யப்பட்டது.
அறுவடை செய்யப்பட்ட மீன்கள் ஒரு கிலோகிராமுக்கு 600 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு, 696,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதில் 500 கிலோகிராம் மீன்களை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமும், 660 கிலோகிராம் மீன்களைப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் மீன் வியாபாரி ஒருவரும் கொள்முதல் செய்துள்ளனர்.
உணவுக்கான மீன்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்வதற்காக, நாட்டில் முதன்முறையாக வட்ட வடிவக் கூண்டு பயன்படுத்தப்பட்ட திட்டமாக இது அமைந்துள்ளது.
.jpg)

Post a Comment
Post a Comment