யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் இரு குழுக்களிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்பற்று மற்றும் நிற்சாமம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை பொலிஸார் மற்றும் விசேட குழுவினர் பெரும் முயற்சியின் பின்னர் மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மோதலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிலரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பு.கஜிந்தன்)


Post a Comment
Post a Comment