கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத் திட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரிவித்து சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த மனுவை ஜனவரி மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று குறித்த மனு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, துறைமுக நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட சூழல் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி குறித்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் 25ம் திகதி விசாரிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
