இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக வவுனியா பிரதேச செயலகர் பிரிவில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மூன்று வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
பாதிப்படைந்த மக்களை தங்க வைப்பதற்காக மாதர்பனிக்கன்குளம் பகுதியில் ஒரு தற்காலிக நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு 30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
