நியூசிலாந்திற்கான புதிய தேசியக் கொடியை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் 48 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
தாமதமாக அளிக்கப்பட்ட மற்றும் வெளிநாட்டு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், தேசிய கொடி தொடர்பான முதற்கட்ட வாக்கெடுப்பின் இறுதி முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் தேசியக்கொடி அவுஸ்திரேலியாவின் தேசியக் கொடியை ஒத்ததாகக் காணப்பட்ட நிலையில், புதிய தேசியக் கொடியொன்றை தெரிவு செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்தது.
அதனடிப்படையில், புதிய தேசியக் கொடி தொடர்பான 5 தெரிவுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆரம்பகட்ட தெரிவில், வௌ்ளை மற்றும் நீல நிறக்கொடியில் கறுப்பு நிறத்துடனான வௌ்ளி பன்னத்தாவரம் (Silver Fern) வரையப்பட்டுள்ள கொடி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, இந்த தேசியக் கொடிக்காக 15 இலட்சத்தும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்
