தேசிய பொங்கல் விழா யாழில்



தேசிய பொங்கல் விழா, இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது. 

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வலி வடக்கில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேறவுள்ளதை முன்னிட்டு, வலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகளும் ஏற்பாடாகியுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.