தமிழகத்தில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பெய்துவரும் கன மழை காரணமாக சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
நகரின் பல பகுதிகளில் பல அடிகள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கியிருக்கிறது.
ஆயிரக் கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னைக்கான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.
விமானநிலையத்தின் முனையத்திற்குள் நாலாயிரம் பேர் வரையில் நிர்க்கதியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு வாரங்களாக பெரும் மழை பெய்துவருகிறது.
வெள்ளப் பெருக்கில் குறைந்தது 188 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்றது.
