அவன்கார்ட் கப்பலை உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு




காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சிலோன் ஷிபின் நிறுவனத்திற்குச் சொந்தமான மஹாநுவர கப்பலை குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலீ லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
 
அவன்காட் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கப்பலில் உள்ள ஆயுதங்கள் அனைத்தையும் கடற்படையினரிடம் ஒப்படைத்த பின்னர், கப்பலை விடுவிக்குமாறு இதற்கு முன்னரும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
இந்த நிலையில், சிலோன் ஷிபின் நிறுவனம் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்து குறித்த கப்பலை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஆராய்ந்த நீதவான் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.