சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகள்





சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண வேண்டும் என, இலங்கை தெரிவித்துள்ளது. 

இராணுவத்தின் புதிய பிரிவுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

இலங்கை இராணுவமும் வளர்ந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினருக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதோடு, இராணுவத்தை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

இராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையானது சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அதேபோல அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.