பதியத்தலாவயில் இரு வேறு வாகன விபத்துக்கள்




இன்று (20) நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்தவர்கள் பதியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதியதில் விபத்தொன்று இடம்பெற்றதுடன் , இந்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இடம்பெற்ற மற்றுமொறு விபத்தில் தனியார் பஸ்ஸொன்றும் ,லொறியொன்றும் மோதியுள்ளது.