அட்டனில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு





(க.கிஷாந்தன்)

அம்பகமுவ பிரதேச சுகாதார பரிசோதகர்களினால் அட்டன் நகரத்தில் தீடிரென மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது, காலவதியான பொருட்கள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட பல பேருக்குவழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

திங்களன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, காலாவதியான பொருட்கள் விற்பனை,சுத்தம் இன்மை, அரிசி தொகைகளில் புழுக்கள், மரக்கறி வகைகளில் புழுக்கள் காணப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அட்டன் நகரில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.