'சீன சுரங்கத்தில் 8 பேர் உயிருடன் உள்ளனர்'




சீனாவில் சுரங்கம் சரிந்ததில் ஐந்து நாட்களாக அகப்பட்டிருந்தவர்களில் எட்டுப் பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
'சீன சுரங்கத்தில் 8 பேர் உயிருடன் உள்ளனர்.
இந்த எட்டுப் பேரை மீட்புப் பணியாளர்கள் இன்னமும் மீட்கவில்லை, ஆனால், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு விநியோகங்களை அனுப்ப முயற்சிக்கின்றனர்.
சீனாவின் கிழக்கே ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள அந்த ஜிப்சம் சுரங்கத்தில் ஏற்பட்ட பாறைச் சரிவு மிகவும் பாரியது என்று சீன பூகம்ப கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ளது.
இன்னமும் 9 சுரங்க தொழிலாளிகளை காணவில்லை. ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டு இரு தினங்களின் பின்னர், அதன் உரிமையாளர் ஆழமான கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார்.