எம்பிலிப்பிட்டிய இளைஞனின் மரணம்- பொலிஸாரை கைது செய்ய பரிந்துரை

எம்பிலிட்டிய பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையில், 21 பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை, சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன இன்று கையளித்துள்ளார்.
இவ்வாறு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 21 பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 5ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மோதலின் போது பொலிஸாரே குறித்த நபரை மாடியிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையில், 21 பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை, சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன இன்று கையளித்துள்ளார்.
இவ்வாறு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 21 பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 5ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மோதலின் போது பொலிஸாரே குறித்த நபரை மாடியிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது