இதற்கான ஆயத்தப் பணிகளை கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் விரோத செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவாகியுள்ளதாகவும், எதிர்வரும் வாரம் கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட உள்ளனர்.
கருத்தரங்கு எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட உள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

