இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக திலங்க சுமதிபால




இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவன தேர்தலில் 88 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அவர் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக மொஹான் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவர்களாக கே.மதிவானன் மற்றும் ஜே. தர்மதாச ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.