(2ம் பின்னினைப்பு)
ஜகார்த்தா தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் சூத்திரதாரியின் பெயரையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசுக்குள் தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள பஹ்ருண் நயிம் என்ற நபரே இதனை திட்டமிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கறுப்பு உடையில் வந்த நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாமே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு குழு கூறியுள்ளது.
தலைநகரின் மையப் பகுதியில், முக்கிய கடைவளாகங்கள், தூதரகங்கள் அமைந்துள்ள வணிகப் பகுதியில் குண்டுகள் வெடித்தன.
ஐந்து தீவிரவாதிகளும், குறைந்தபட்சம் இரண்டு பொதுமக்களும் இறந்ததாக போலிஸார் கூறுகின்றனர்
(முதலாம் பின்னிணைப்பு)
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தோனேசியாவின் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையிலேயே இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போதும் துப்பாக்கிச் சண்டை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை யாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்ட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வௌிவரவில்லை.


