மறைந்த சோபித்த தேரரின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உடுவே தம்மாலோக தேரர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் உடன் விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பாதுகாப்புத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
உடுவே தம்மாலோக தேரர் இந்த அறிவிப்பை, சட்டவிரோத யானை வளர்ப்பு தொடர்பாக சட்டத்தின் கொண்டுவரப்பட்டதன் பின்னரே விடுத்துள்ளார். சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெற முன்னர் எந்தவொரு பிக்குவும் இது தொடர்பில் எந்த கருத்தும் வெளியிடவில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

