தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்களை விடுவிக்க -பொன்சேகா




தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா கேட்டிருக்கின்றார்.
இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதனை வரவேற்ற சரத்பொன்சேகா அதேபோன்று தன்னை கொலை செய்ய நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு உதவியவர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறும் கேட்டுள்ளார்.
தான் சிறையில் இருந்தபோது தமிழ் அரசியல் கைதிகளை அங்கு சந்தித்ததாகவும், வழக்கு விசாரணைகளுக்காக அவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த சந்தர்ப்பங்களில் தமிழ் கைதிகள் தமது பிரச்சினைகளை தன்னிடம் விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்