காலி மே தினக் கூட்டத்தில் இருபெரும் ஊர்வலங்கள், 11 ஆயிரம் பஸ்களில் ஆட்கள்



காலி நகரில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மே தினக் கூட்டத்துக்கு காலி மஹமோதர மற்றும் காலி தெவட்ட ஆகிய பிரதேசங்களிலிருந்து இரு பெரும் ஊர்வலங்களாக கட்சி ஆதரவாளர்கள் வருகை தரவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதில், காலி தெவட்ட பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலத்துக்கு அமைச்சர் சந்திம வீரக்கொடியும், மஹமோதரயிலிருந்து வரவுள்ள ஊர்வலத்துக்கு தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலாலும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு நாடு முழுவதிலுமிருந்து 11 ஆயிரம் பஸ்களில் ஊழியர்கள் வருகை தரவுள்ளதாகவும் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.