பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச அதிகாரியொருவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க சட்டத்தில் இடமில்லையென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எமது நாட்டில் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இது போன்ற பாதுகாப்பொன்று இதுவரை வழங்கப்பட்டிருக்க வில்லை. மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்கவில்லையென அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்டது. இதற்காக உயர் நீதிமன்றத்தின் அனுமதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.
ஊர், ஊராக நாடு நாடாக சுற்றித் திரிந்து தனக்கு ஏசுவதற்கு அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படத் தேவையில்லையென அவரால் அதற்கு நியாயம் கூறப்பட்டது.
ஆனால், சந்திரிக்கா அ்ன்று தனக்குச் செய்ததாக கூறிய அதேவேலையைத் தான் மஹிந்த ராஜபக்ஷ இன்று செய்துகொண்டிருக்கின்றார். சட்டத்துக்கு முரணாக எவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படத் தேவையில்லை. அவருக்கு வழங்கப்படவேண்டியது பொலிஸ் பாதுகாப்பு எனின், அதனைத்தான் அவருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

