ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு ஹோமாகம தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளராக தான் இருக்கும் போது, ஹோமாகம தொகுதியின் புனர்நிர்மாணப் பணியின் பொறுப்பை காமினி திலகசிறிக்கு எழுத்து மூலம் வழங்கி, தான் அக்கூட்டத்தில் நேரடியாகவும் கலந்துகொண்டுள்ளார்.
இதனால், ஹோமாகம தொகுதி அமைப்பாளரான தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை முன்னெடுக்குமாறு கேட்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

