திடீர் சுற்றிவளைப்பு 32 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்கு



மக்கள் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உணவுகளை விநியோகித்ததாக கண்டறியப்பட்ட அலவ்வை மற்றும் மாறவில ஆகிய பிரதேசங்களிலுள்ள 32 ஹோட்டல்களுக்கு எதிராக சுகாதார பரிசோதனை அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மஹவெவ மற்றும் மாறவில ஆகிய பிரதேசங்களிலுள்ள 135 ஹோட்டல்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வழக்குத் தொடரப்பட்ட ஹோட்டல்களுள் நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்கள் ஐந்தும் காணப்படுவதாக திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சுகாதார பரிசோதனை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.