வடக்கு சிரியாவில் மோதல் நடந்துவரும் பகுதிகளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் குறைந்தது 30 ஆயிரம் பொதுமக்கள் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மோதல் பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மக்களுக்காக எல்லையை திறந்துவிடும்படி துருக்கியை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மற்றைய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் அல்லது அதனை நெருங்கிவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச்செல்லும் பொதுமக்கள் துருக்கியூடாக பயணிக்கும்போது, எல்லையில் வைத்து சுடப்படுகின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

