சுகாதாரம், தொடர்பாடல் சேவை மற்றும் மொத்த வர்த்தகம் போன்ற துறைகளுக்கு வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக வட் வரி அதிகரிக்கப்பட்டால், தற்போது கடுமையான வாழ்க்கைச் செலவு சுமையை தாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி தொடக்கம் 15 % வட் வரி நடைமுறைக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

