அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம்



அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன்.
தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது.
சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன்.
தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.