இலங்கையின் திட்டத்துக்கு பங்களாதேஷ் எதிர்ப்பு



இலங்கை கடல் எல்லையை மேலும் 1,000 கடல் மைல்கள் விரிவாக்கும் இலங்கையின் திட்டத்துக்கு பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விரிவாக்குவதற்கான அனுமதி கோரியிருந்த நிலையிலேயே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளும் உள்ளடங்குவதன் காரணமாகவே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நியதிகளின் படி ஒரு நாட்டுக்கு 350 கடல் மைல்களே விஸ்தரிப்புக்கு கோர முடியும் என பங்களாதேஷ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளும் இலங்கையின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.