தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன.
மருந்து வகைகளின் விலைகளும் உயர்வடையும். இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மக்களின் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் சேவைகளினதும் விலைகளும் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளது. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு புதிய அரசாங்கமும் மக்களை பொருளாதார சுமைக்குள் தள்ளிவிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து வற் வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

