15 வீத வற் வரி அதிகரிப்பு : இன்று முதல் அமுலுக்கு



அர­சாங்­கத்­தினால் அதி­க­ரிக்­கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறு­மதி சேர் வரி­யான வற் வரி இன்று இரண்டாம் திகதி திங்­கட்
கி­ழமை முதல் நடை­மு­றைக்கு வரு­வ­தாக நிதி­ய­மைச்சு அறி­வித்­துள்­ளது.
அதன் பிர­காரம் இது வரைக்­கா­லமும் அற­வி­டப்­பட்டு வந்த 11 சத­வீ­த­மான பெறு­மதி சேர் வரி இன்று முதல் 15 சத­வீ­த­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று நிதி­ய­மைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் இது­வரை பெறு­மதி சேர் வரிக்கு உள்­ள­டக்­கப்­ப­டாத மின்­சார கட்­ட­ணத்­திற்கு எதிர்­வரும் காலத்­திலும் இவ்­வரி உள்­ள­டக்­கப்­பட மாட்­டாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­தோடு இது வரைக்­கா­லமும் வற்­வரி விலக்­க­ளிக்­கப்­பட்­டி­ருந்த தொலைத்­தொ­டர்பு சேவை வழங்­கு­னர்கள், தொடர்­பாடல் சாதனம் அல்­லது இயந்­தி­ரங்கள், உயர் தொழில்­நுட்ப சாத­னங்கள் , தொடர்­பாடல் துறைக்கும், சுகா­தார சேவை, நீர்­கட்­டணம் மற்றும் தொலைத்­தொ­டர்பு கட்­டணம் ஆகி­ய­வற்­றிற்கும் குறித்த வற் வரி அதி­க­ரிப்பு தாக்கம் செலுத்தும் என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் மருந்து பொருட்­க­ளுக்கு வற்­வரி அறி­வீடு மேற்­கொள்­ளப்­ப­டா­த ­நி­லையில் தனியார் துறை சுகா­தார சேவைக்கு வற் வரி சீர்த்­தி­ருத்தம் தாக்கம் செலுத்தும் என நிதி­ய­மைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.