அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்றில் பாதுகாப்பற்ற உணவுப் பண்டம் வைத்தோருக்கு அபராதம்



உணவுப் பொருட்களை உரிய முறையில் மூடாது பாதுகாப்பற்ற முறையில் வைத்தோர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களைச் சேர்ந்த சில தாகசாந்தி, உணவுக் கடைகளில் உணவுப் பொருட்கள் பேணிப் பாதுகாக்காமல், மூடாமல் வைக்கப்பட்டதற்கு எதிராக, பொதுச் சுகாதரப் பரிசோதகர்கள் உணவுத் திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கடந்த செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த நிறுவனங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் திருமதி நளினி கந்தசாமி, தலா மூன்றாயிரம் ரூபாவினை தண்டப் பணமாக விதித்தாா்.