பனாமா இரகசிய ஆவணங்களில் தொடர்புடைய அனைத்து நபர்களின் தகவல்களும் சர்வதேச புலனாய்வு ஊடக சங்கம் மூலம் இன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் மூலம் இதுவரை வெளிவராத இலங்கையர்கள் உட்பட பெரும்பான்மையானோரின் பெயர்கள் இன்று தெரியவரவுள்ளது.
பனாமா நாட்டில் மொசக் பொன்சேகா என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு வசதி வழங்கியுள்ளமை தொடர்பாக காட்டக்கூடிய இரகசிய ஆவணங்கள் கடந்த மாதம் வெளிவந்து உலகம் பூராகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

