(க.கிஷாந்தன்)
மலையகத்தில் 15.05.2016 அன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று 15.05.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடர்ந்து மழை பெய் துவருவதால் இந்த வான்கதவு திறந் துவிடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத் தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீ ழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்து பவர்கள் அவதானத்துடன் செயற்படு ம்படியும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை பெய்து வரும் அடை மழை காரணமாக நுவரெலியா – அட்டன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

